Panchayat president providing Pongal packages people for 15 years

Advertisment

சிதம்பரம் அருகே சி கொத்தங்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராகவும் துணைத் தலைவராகவும் வேணுகோபால் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி அம்சா வேணுகோபால் கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தங்குடி ஊராட்சியில் வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பொங்கலையொட்டி புது அரிசி, வெள்ளம், நெய் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான ரூ.250 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகின்றனர். இதனை இவர்கள் வாகனம் மூலம் வீடு வீடாக எடுத்துச் சென்று பொது மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கூறி பொங்கல் தொகுப்பை வழங்குவது அனைவரும் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் தெரிவிப்பாக நடைபெற்ற வருகிறது.