Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டிக் கொலை!

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Panchayat president husband was hacked to passed away

 

கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 45), மீனவர். இவரது மனைவி சாந்தி(40). இவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மதிவாணன் கொலை வழக்கில் மதியழகன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாமீனில் வெளி வந்த மதியழகன் ஊருக்குள் செல்லாமல் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார். 

 

இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டில் இருந்து வெளியே நடந்து வந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டினர். இதில் பதறிய மதியழகன் கூச்சலிட்டபடி நடுரோட்டில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று மதியழகனை நடு ரோட்டிலேயே மடக்கி வெட்டிக் கொலை செய்தனர்.

 

இதற்கிடையே அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததைப் பார்த்த அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மதியழகன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதிவாணன் கொலை வழக்கில் பழிக்குப் பழியாக மதியழகனின் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் குடியிருப்பு பகுதிக்குள் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்