/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-16_10.jpg)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்ச குழி கிராம ஊராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.30 லட்சம் செலவில் நடைபெறுகிறது. பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதன் 2 சதவீதம் கமிஷனாக ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு ஒப்பந்ததாரர் சந்தோஷ் அவ்வளவு பணம் தர முடியாது எனக்கூறியுள்ளார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் 2 தவணைகளாக பணம் தரும்படி கேட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தோஷ் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனையில் புதன்கிழமை முதல் தவணையாக ரூ.15,000 ஆயிரம் ரசாயனப் பொடி தடவிய பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.அப்பொழுது மறைந்திருந்த கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)