Advertisment

பதவி ஏற்றும் பரிதவிப்பில் ஊராட்சிமன்ற தலைவர்கள்... பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மத்திய அரசின் உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வந்த வந்தது. இதனால் கிராமங்களில் சரியான முறையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை இருந்தது. மேலும் பொதுமக்களுக்கு தெருவிளக்கு, குடிநீர்,சுகாதாரம் உள்ளிட்ட எந்த தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தனர்.

Advertisment

 Panchayat leaders in public...

இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி தலைமையிலான கட்சியினர் ஒன்றிய, மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவை விட அதிக அளவில் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் பணபலத்தால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ஒன்றிய தலைவர் பதவிகளையும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி களையும் கைப்பற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் முடிந்து ஒரு மாதத்தை கடந்தும் இன்று வரை கிராமப்புறங்களில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாத சூழ்நிலை நிலவுகிறது.

Advertisment

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுகையில்,நாங்க பதவியேற்று ஒரு மாதம் ஆவது தான் மிச்சம் எங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் எந்த ஒரு வழிகாட்டுதலையும் இதுவரை சரியாக சொல்லவில்லை. இதுகுறித்து அவர்களுக்கும் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 Panchayat leaders in public...

மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவரது சொந்த பணத்தில் செலவு செய்தாலும் அதை எப்படி திரும்பப் பெறுவது குறித்த எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லை. மேலும் தற்போது கடந்த முறை இல்லாத ஒரு புதிய திட்டத்தை ஆன்லைன் முறை என அரசு கொண்டு வந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு செக் பவர் இல்லாததால் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு ஆன்லைன் மூலம் திட்டப் பணிகளுக்கான தொகையை பெறுவது குறித்த எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இதனால் ஓட்டுப்போட்ட மக்களிடம் எங்களுக்கு தலைக்குனிவு ஏற்படுகிறது என்று புலம்புகிறார்கள். மேலும் இதுகுறித்து ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து ஆன்லைன் மூலமோ பழைய முறைப்படியே திட்டப் பணிகளுக்கான தொகை பெறுவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர்.|

இந்த சம்பவம் ஒன்று இரண்டு கிராமங்களில் இல்லை. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் ஓட்டு போட்டும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு பெற்று குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அதே நிலை உள்ளதால் விரக்தியில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

leaders village panchayat
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe