Skip to main content

பதவி ஏற்றும் பரிதவிப்பில் ஊராட்சிமன்ற தலைவர்கள்... பொதுமக்கள் அவதி!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மத்திய அரசின் உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வந்த வந்தது. இதனால் கிராமங்களில் சரியான முறையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை இருந்தது. மேலும் பொதுமக்களுக்கு தெருவிளக்கு, குடிநீர்,சுகாதாரம் உள்ளிட்ட எந்த தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தனர். 

 

 Panchayat leaders in public...

 

இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி தலைமையிலான கட்சியினர் ஒன்றிய, மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவை விட அதிக அளவில் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் பணபலத்தால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ஒன்றிய தலைவர் பதவிகளையும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி களையும் கைப்பற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் முடிந்து ஒரு மாதத்தை கடந்தும் இன்று வரை கிராமப்புறங்களில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாத சூழ்நிலை நிலவுகிறது.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறுகையில், நாங்க பதவியேற்று ஒரு மாதம் ஆவது தான் மிச்சம் எங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் எந்த ஒரு வழிகாட்டுதலையும் இதுவரை சரியாக சொல்லவில்லை. இதுகுறித்து அவர்களுக்கும் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 

 Panchayat leaders in public...

 

மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவரது சொந்த பணத்தில் செலவு செய்தாலும் அதை எப்படி திரும்பப் பெறுவது குறித்த எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லை. மேலும் தற்போது கடந்த முறை இல்லாத ஒரு புதிய திட்டத்தை ஆன்லைன் முறை என அரசு கொண்டு வந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு செக் பவர் இல்லாததால் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு ஆன்லைன் மூலம் திட்டப் பணிகளுக்கான தொகையை பெறுவது குறித்த எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. 

இதனால் ஓட்டுப்போட்ட மக்களிடம் எங்களுக்கு தலைக்குனிவு ஏற்படுகிறது என்று புலம்புகிறார்கள். மேலும் இதுகுறித்து ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து ஆன்லைன் மூலமோ பழைய முறைப்படியே திட்டப் பணிகளுக்கான தொகை பெறுவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.|

இந்த சம்பவம் ஒன்று இரண்டு கிராமங்களில் இல்லை. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் ஓட்டு போட்டும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு பெற்று குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அதே நிலை உள்ளதால் விரக்தியில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

The panchayat secretary was suspended for farmer incident

 

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

அதே சமயம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.