Skip to main content

அதிகாரியை மாற்றக்கோரி ஊராட்சிமன்ற தலைவர்கள் முற்றுகை போராட்டம்...

Published on 24/10/2020 | Edited on 24/10/2020
Panchayat leaders of perambalur district collector's office

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி செய்து வருகிறார் அறிவழகன். இவர் ஊராட்சி மன்ற தலைவர்களை மதிப்பதில்லை, கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் கரோனா விழிப்புணர்வு உட்பட கிராம ஊராட்சிகளுக்கு செய்யவேண்டிய உடனடித் தேவைகளை, பணிகளை நிறைவேற்றித் தருவதற்கு ஒத்துழைப்பதில்லை என்றும் மேலும் இவர் ஊராட்சி மன்றத் தலைவர்களை மரியாதை குறைவாக பேசுவதாகவும் இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அறிவழகனை அங்கிருந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். 

 

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் சாந்தா அவர்களை சந்தித்து நேரில் புகார் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரை சந்திப்பதற்காக காத்திருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் சாந்தா, ஊராட்சி மன்ற தலைவர்களை சந்திக்காமல் அலுவலகத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு வேகமாக சென்றுள்ளார். 

 

இதனால் கோபமுற்ற ஊராட்சிமன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி மதிக்காமல் அவமரியாதையாக நடத்துவதாக கூறி கோபமுற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாரதிதாசன் போராட்டத்தில் அமர்ந்திருந்த ஊராட்சி தலைவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 

 

அதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர்கள் கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் கரோனா பரவல் பயம் காரணமாக பல மாதங்களாகவே பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு சம்பந்தப்பட்ட அலுவலர் சங்கத்தினர் உட்பட யாரையும் நேரடியாக சந்திப்பதில்லை, மனு வாங்குவதில்லை, குறைகளை கேட்பதில்லை, தானுண்டு தன் பணி உண்டு என நீண்ட சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறார் என்கிறார்கள் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள். 

 

தமிழகத்தில் பல மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் உயிரை கூட பெரிதாக எண்ணாமல் கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் இரவு பகல் பாராமல் கடுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணி செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவின் செயல்பாடுகள் மாவட்ட மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் சாந்தாவை மாற்ற வேண்டும். மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்ய வேண்டும் என்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.