தூத்துக்குடி, கோவில்பட்டியில் உள்ள திட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ராஜ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள திட்டங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் பொன் ராஜ். 63 வயதுடைய இவர் தன் தோட்டத்தில் உள்ள தொழுவில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி விட்ட நிலையில் அருகிலிருந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக கார்த்திக், வசந்த ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.