Pan Masala traders caught red-handed

திருச்சி பெரிய கடை வீதி, ராணி தெரு பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை மொத்த விற்பனை செய்து வருவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

அதனடிப்படையில், திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன் வீட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 56 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களும் 9 கைப்பேசியும் மற்றும் ரூபாய் 6,57,320 ரொக்கம் மற்றும் கடைக்காரர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக 227 கிராம் வெள்ளி நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லெட்சுமி மற்றும் கோட்டை ஆய்வாளர் தயாளன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களில் வழக்கு போடுவதற்காக 6 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.