வருமானவரிதுறையினரால் வழங்கப்படும் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமானது. தற்போது அந்த பான்கார்டிலே இரண்டு பேருக்கு ஒரே மாதிரியான எண் இருப்பது தற்போது அதிர்ச்சியான தகவல். இதை பார்த்த வங்கி அதிகாரிகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
ஒருவரின் பான்கார்டை வைத்து தான் அவருடைய ஒட்டுமொத்த வரவு செலவையே கண்காணிக்க முடியும் என்கிறார்கள். ஆனால் அந்த கார்டே குளறுபடியாக இருப்பது தற்போது அதிர்ச்சிக்கு காரணம்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் ஒய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர். இவரது மகன் செந்தில் குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமயபுரம் நெ. 1 டோல்கேட் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி கடந்த 4 ஆண்டுகளாகி வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியில் தனி நபர் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் கீரமங்கலம் கிராமத்தினை சேர்ந்த செந்தில்குமார்.
அப்போது கடன் வழங்குவதற்கு முன் வங்கிமேலாளர், செந்தில்குமாரின் ஆதார்கார்டு, பான் கார்டு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார் அப்போது வருமானவரித்துறையினரால் செந்தில்குமாருக்கு வழங்கப்பட்ட பான் கார்டு எண் அதே வங்கியில் வாடிக்கையாளராக இருக்கும் கீழவாளாடி கிராமத்தினைச் சேர்ந்த சுந்தரம் ஒய்வு பெற்ற பாரத மிகு மின் நிறுவனத்தில் பணியாற்றிய இவரது மகன் செந்தில்குமார் பான் கார்டு எண்ணும் ஒரே எண் கொண்டது எனத் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கீரமங்கலம் செந்தில் குமார், வங்கி கிளை மேலாளரிடம் முறையிட, வங்கி அலுவலர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இது குறித்து தெரிவிக்க அறிவுறுத்தினர். ஆனால் கீரமங்கலம் செந்தில்குமார் கீழவாளாடி செந்தில்குமாரை நேரில் சந்திந்து, பான் கார்டில் தங்கள் இருவருக்கும் ஏற்பட்ட குறைகளை தெரிவித்துக் கொண்டனர். அப்போது தான் தங்களது பெயரும், தங்களது தந்தையின் பெயரும், தங்களது பிறந்த தேதியும் ஒரே போல உள்ளதனை கண்டு வியந்தனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால், இவர்களுக்குள் சம்பள பிடித்தம் செய்வதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள தென அச்சமுடன் இருவரும் இருக்கின்றனர்.
இந்த குளறுபடிக்கு யார் பொறுப்பு என்பது குறித்து, வருமானவரித்துறை அதிகாரிகளிடம் இருவாடிக்கையாளர்களும் முறையிடபோவதாக தெரிவித்தனர்.