காசிமேட்டில் பாமாயில் கசிவு... அச்சத்தில் பொதுமக்கள்

Palm oil spill in Kasimedu... Public in fear!

சென்னை காசிமேடு அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்ட ராட்சத குழாய் உடைந்து பாமாயில் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை காசிமேட்டிலிருந்து திருவொற்றியூர் கே.டி.வி ஆயில்ஸ் எனும் தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு பூமிக்கடியில் ராட்சத குழாய் மூலம் பாமாயில் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் அந்த குழாயில் பாமாயில் கசிவு ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கசிவில் பாமாயில் வெளியேறிய நிலையில், தற்பொழுது அந்த பகுதி முழுவதும் பாமாயில் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. குறிப்பாக காசிமேட்டில் உள்ள படகு பழுதுபார்க்கும் இடத்திற்கு அருகே சுமார் ஒரு டன் பாமாயில் கொட்டி கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் எண்ணெய் நிறுவனத்திற்கு தகவலளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களிடம் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதால் மோட்டார் மூலம் எண்ணெய்யை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பாமாயில் கசிவு சம்பவம் அந்த பகுதியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Environmental kasimedu
இதையும் படியுங்கள்
Subscribe