ADVERTISEMENT

'ரேஷனில் பனை வெல்லம்... தீபாவளிக்கு தமிழ்த்தறி பட்டுப்புடவை...' - அறிமுகப்படுத்தினார் முதல்வர்!

11:52 AM Oct 23, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் வேளாண் பட்ஜெட்டில் பனை பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரேஷன் கடைகளில் கற்பகம் பிராண்ட் பனை வெல்லம் விற்பனையைத் தொடங்கிவைத்தார். அதேபோல் காதி கிராஃப்ட் பொருட்களை விற்பனை செய்ய ‘tnkadhi’ என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு விற்பனையாக 'தமிழ்த்தறி' என்ற பட்டுப்புடவையையும் முதல்வர் அறிமுகம் செய்துவைத்துள்ளார். சாயல்குடியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பனைபொருள் பயிற்சி மையத்தை காணொளி மூலம் துவங்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT