Advertisment

ரேஷன் கடைகளில் பனைவெல்லம்-தமிழக அரசு அரசாணை!

 Palm jam in ration shops - Government of Tamil Nadu Government!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அப்பொழுது அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் பனை மரம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருந்தது. பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது. அதேபோல் பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில், அமுதம் அங்காடிகளில் பனைவெல்லம் விற்க தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்கத்திட்டமிடப்பட்டு தற்பொழுது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

palm tree TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe