pallavaram Medical college professor passed away

சென்னை பல்லாவரத்தில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தனலட்சுமி தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய புகையை பார்த்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்பு உள்ளே சென்ற நிலையில் தீயணைப்புத் துறையினர் உடல் முழுவதும் தீ காயங்களுடன் இறந்த நிலையில் தனலட்சுமியின் உடலைச் சடலமாக மீட்டனர்.

Advertisment

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதனால் தீ விபத்து ஏற்பட்டது? அல்லது வேறு எதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.