பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

திருச்சி அருகே இன்று காலை பல்லவன் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. பல்லவன் இன்ஜின் திருச்சி ஜங்சன் பிளாட்பார்ம் உள்ளே நுழையும் போது தண்டவாளம் உடைந்து இஞ்சின் மட்டும் தரையிறங்கியது. மாற்று பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உடைந்த தண்டவாளம் புதிதாக அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இதனால் மதுரை - சென்னை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திண்டுக்கல், ராமேஸ்வரம் பயணிகள் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

express Pallavan Train
இதையும் படியுங்கள்
Subscribe