கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வீட்டு மளிகைப் பொருட்கள் மற்றும் முகக் கவசம், சானிடைசர், கைக்கழுவும் சோப் உள்ளிட்ட தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

Advertisment

5555

இதேபோல் பாளை சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான் தனது தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கி வருகிறார். மேலப்பாளையம், ஹாமீம்புரம் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கச் சென்றபோது பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களுடைய வாழ்வாதரத்துக்குத் தேவையான பொருட்கள் வழங்காமல் கபசுர குடிநீர் எங்களுக்குத் தேவையில்லை என்றும் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மக்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் தற்போதுமக்களைச் சந்திப்பது எதற்கு என்றும் கேட்டதுடன், அவர் வழங்கிய கபசுரக் குடிநீர் பெறாமல் சென்றுவிட்டனர்.