Skip to main content

பாலாற்றில் மணல் திருட்டு...மணல் மாபியாக்களிடம் பேரம் பேசும் போலீஸ்!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் மற்றும் சான்றோர்குப்பம் பகுதியில் பாலாற்று படுக்கை அருகில் விவசாய நிலம் வைத்துள்ளவர் லீக்மிசந்து ஜெயின். அந்த நிலத்தில் ஜூலை 9 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளி லாரிகளில் நிரப்பி அனுப்பிக் கொண்டுயிருப்பதை ஜூலை 10 ஆம் தேதி விடியற்காலை பார்த்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியான அப்பகுதி மக்கள், காலை 11 மணியளவில் மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் ஏற்றுவதை தடுத்துள்ளனர்.

 

 

PALAR RIVER AT VELLORE SAND SMUGGLING ADMK SUPPORT AND POLICE DEAL

 

 

 

மேலும் இதுப்பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.  தகவலின் பேரில் அங்கே வந்த ஆம்பூர் போலீசார் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஜேசிபி இயந்திரங்கள், 4 டிப்பர் லாரிகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஓட்டுனர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பாலாற்றில் மணல் அள்ளி வெளிமாநிலத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்தது. மணல் அள்ளிய லாரிகள் அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது என்பதை அதில் உள்ள அதிமுகவின் கலரே காட்டிக்கொடுத்தது.

 

 

PALAR RIVER AT VELLORE SAND SMUGGLING ADMK SUPPORT AND POLICE DEAL

 

 

 

அதே போல், மணல் அள்ள லீக்மிசந்து ஜெயின்க்கு தைரியம் தந்ததே ஆளும் கட்சி பிரமுர்கள் தான். அதனால் தான் வண்டிகளை மட்டும் பிடித்த காவல்துறையினர், அதன் ஓட்டுநர்களை கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளது. சம்மந்தப்பட்ட லீக்மிசந்தை கைது செய்யாமல் இருக்க போலீசாருக்கு அரசியல் மட்டத்தில் இருந்து அழுத்தம் வருவதால், அவரிடம் டீலிங் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்த ஆம்பூர் வாசிகள். பெருசுப்படுத்தாதிங்க, தேர்தல் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் என சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.