Advertisment

தஞ்சை தொகுதியில் 6 வது முறையாக எம்.பி. ஆகிறார் பழநிமாணிக்கம்!

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் 6 வது முறையாக வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார் தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்.

Advertisment

கடந்த 1996 முதல் தொடர்ந்து 2009 ம் ஆண்டு வரை 5 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2009 ல் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார். 2014 ம் மக்களைவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

election

இந்த நிலையில் கட்சியில் வேட்பாளராக சீட் வாங்கவே கடும் போட்டிகளுக்கு இடையே சீட் வாங்கியவர் செலவுகளுக்காக தன்னிடம் இருந்த சில பிளாட்களை விலையும் பேசினார். இறுதிகட்ட பிரச்சாரத்தின் போது மீண்டும் உள்கட்சி மோதல்கள் உருவான நிலையில் பல கிராமங்களுக்கு கூட வாக்கு சேகரிக்க செல்லவில்லை. ஆனால் வாக்காள்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.

Advertisment

இந்த நிலையில் 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் எண்ணத் தொடங்கியதுபோது வந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த பழநிமாணிக்கம் எங்க கட்சிக்காரங்க என்ன செஞ்சு வச்சிருக்காங்களோ என்று பத்திரிக்கையாளர்களிம் பேசிக் கொண்டிருந்தார். எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலை என்ற தகவல் வந்ததும் உற்சாகமடைந்தார்.அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில்வெற்றி பெற்றார். சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர்வெற்றி பெற்றுள்ளார்.

mp pee Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe