Advertisment

தந்தை பெரியாரின் 143வதுபிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதியைக் காக்கவும், சாதி வேற்றுமையைக் களையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவரின் பிறந்த தினத்தைத் தமிழக அரசு கடந்த வாரம் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது. ஜெமினி பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.