Advertisment

"பழனி கோயில் திருப்பதிக்கு நிகராக மாற்றப்படும்"-  ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு! 

publive-image

Advertisment

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (02/08/2022) நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், நகராட்சி ஆணையர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

வருவாய்த்துறை சார்பில் 1,688 பயனாளிகளுக்கு ரூபாய் 17.93 கோடி மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 592 பயனாளிகளுக்க ரூபாய் 3.41 கோடி மதிப்பிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 184 பயனாளிகளுக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பிலும், நகராட்சி சார்பில் ரூபாய் 1.86 கோடி மதிப்பீடு உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து 838 பயனாளிகளுக்கு ரூபாய் 24.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விழாவில் பேசிய ஐ.பி.செந்தில்குமார், "தமிழகத்தில் மக்களுக்கான அரசாட்சி நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு 14 மாதங்களில் லட்சக்கணக்கானபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோருக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு முனைப்பாக உள்ளது. பழனி கோயிலை திருப்பதிக்கு நிகராக மாற்றும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

Advertisment

பழனி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சித்த மருத்துவக் கல்லூரிக்கான பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. வையாபுரி குளத்தை சீரமைத்து படகு குழாம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.பழனி சட்டமன்றத் தொகுதியில் தேவையான இடங்களில் தற்போது புதிய ரேசன் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 70 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளன. விரைவில், இதற்கான பணிகள் தொடங்க உள்ளன" என்று கூறினார்.

MLA Tirupati
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe