/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_531.jpg)
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் முடி காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இதற்காக பழனி கோயில் சார்பில் சண்முகநதி, சரவண பொய்கை, ஒருங்கிணைந்த முடி மண்டபம், திருக்கோயில் தலைமை அலுவலகம்ஙமுடி மண்டபம், மின் இழுவை ரயில் முடி மண்டபம் என பல இடங்களில் முடி காணிக்கை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் 330 பேர் பணிபுரிந்துவருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே தற்காலிக ஊழியராகப் பணியாற்றிவரும் இவர்களுக்கு 10 ரூபாய் கட்டணத்தில் ஐந்து ரூபாய் பங்குதொகை வழங்கப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சியில் இந்தக் கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த 30 ரூபாய் கட்டணத்தில் 25 ரூபாய் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பங்கு தொகையாக வழங்கப்பட்டு வந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2128.jpg)
திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் கோயிலில் மொட்டையடிக்க பக்தர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை என அறிவித்தது. மேலும் மொட்டையடிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சரிவர ஊக்கத்தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டுவந்த தீபாவளி போனஸ் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதனால், மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். 30 ரூபாய் கட்டணத்தை 70 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும். மாதந்தோறும் ஊக்கத்தொகை 5,000 அறிவித்திருந்த நிலையில், அதை 10,000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும். தற்காலிக பணியாளராக பணியாற்றிவரும் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)