Advertisment

பழனி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை! அமைச்சர்கள் பங்கேற்பு!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குகும்பாபிஷேகம் நடத்தபடும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது.

Advertisment

palani temple function

இதனையடுத்து ஏழுகோடி ரூபாய்மதிப்பீட்டில் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பாதவிநாயகர் கோவில்,மலைமீதுள்ள இடும்பன்கோவில்,வள்ளிசுனை, மயில்வாகனங்கள் உள்ளிட்ட கோவில் கோபுரங்கள்மற்றும் மண்டபங்கள் ஆகியவற்றின் திருப்பணிகள் துவங்க உள்ளன. திருப்பணிகளுக்கான பாலாலயபூஜை கடந்த 30ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் தொடர்ந்து இன்றுநடைபெற்ற யாகபூஜையில் புனித தீர்த்தங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு ஆவாகனம்செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டன.

கட்டிடப் பணிகள் விரைந்துமுடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலாலய நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்விஜயலட்சுமி, கோவில் இணைஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.அப்பொழுது சன்னிதானத்தில் கோமாதாவிற்கு பூஜைகள் செய்து மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

pazhani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe