பழனி முருகன் கோவிலில் 2004-ஆம் ஆண்டு செய்யப்பட்ட உற்சவர் சிலையில் 1.37 கோடி மோசடி நடந்ததாக தலைமை ஸ்தபதி முத்தையாமற்றும் முன்னாள் கோவில் செயல் அலுவலர் கே.கே.ராஜா ஆகியோரை சிலை கடத்தல் போலீசார் கைது செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TH26City photo.jpg)
ஆகம விதிகளை மீறி சென்னை கோளம்பாக்கத்திலுள்ள ஸ்வர்ணம்என்ற கலைகூடத்தில் ஸ்தபதி முத்தையா தலைமையில் 2004-ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்ட சிலையில் 1.37 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், பஞ்சலோக சிலையை 200கிலோவில் செய்வதாகவும் அதில் பதில் பத்து கிலோ தங்கம் இருக்கவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு செய்த சிலையில் 10சதவிகிதம் கூடதங்கம் இல்லை, பஞ்சலோகத்தாலும் செய்யப்படவில்லை. இதனால் உற்சவர் சிலைஆறு மாதத்தில் கறுத்து 14 வருடங்களாக பூட்டி வைத்த இருட்டறையில் உள்ளது என எழுந்தகுற்றச்சாட்டை தொடர்ந்துசிலை கடத்தல் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் மோசடியை உறுதி செய்த போலீசார் ஸ்தபதி முத்தையா மற்றும் முன்னாள் செயல் அலுவலர் கே.கே.ராஜா இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Follow Us