Advertisment

நவபாசான முருகன் சிலை கடத்த முயற்சி!  டிஎஸ்பிக்கள் ரகசிய  விசாரணை!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாசான மூலவர் சிலையை ஸ்தபதி முத்தையா கடத்த திட்டம் போட்ட வழக்கில்

Advertisment

ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் ஐந்து டிஎஸ்பிக்கள் விசாரணயை தீவிரப் படுத்தியுள்ளனர்

Advertisment

.

p

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிமுருகன் கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு நவபாசான மூலவர் முருகன் சிலையை மறைத்து ஐம்பொன் உற்சவர் சிலையை திடீரென வைத்தனர். இப்படி வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையில்மோசடி நடந்து இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டு பிடித்தார். அதை தொடர்ந்து தான் இந்த மோசடியில் ஸ்தபதி முத்தையா மற்றும் முன்னாள் கோவில் இணை ஆணையர்களான ராஜா, புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை கைது செய்தார்.

p

அதை தொடர்ந்து தான் கடந்த வாரம் பொன். மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்பி

. முகேஷ் ஜெயக்குமார்மற்றும் இன்ஸ் பெக்டர்கள் பழனிக்கு விசிட் அடித்து இரண்டு நாள் ஆய்வு செய்தனர். அப்பொழுது தான் கருவறையில் உள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த நவபாசான முருகன் சிலையை கடத்த சதி திட்டம் நடத்துள்ளது என்பதைகண்டு பிடித்தனர். அதன் பின்னணியில் ஸ்தபதி முத்தையா இருக்கிறார் என டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் திட்ட வட்டமாகவே கூறி இருந்தார்.

இந்த நிலையில் தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் ஐந்து டிஎஸ்பிக்கள் நேற்று திடீரென பழனிக்கு விசிட் அடித்து நவபாசான முருகன் சிலை கடத்த சதி தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த ஏடிஎஸ் தலைமையிலான குழுவினர் வாடகை கார்களில் சென்று 2004 மற்றும் 2006ல் பணிபுரிந்த சில அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தியும் வருகிறார்கள். அதை தொடர்ந்து பொன். மாணிக்கவேலும் பழனிக்கு விசிட் அடித்துவிசாரணையை தீவிர படுத்த இருக்கிறார். அதன் மூலம் மேலும் சில கோவில் பணியாளர்கள் கைது ஆக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் கோவில் பணியாளர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

palanimurugan pon manickavel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe