Advertisment

பாலமேடு ஜல்லிக்கட்டில் ‘துணிவு’ வில்லன் -“கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும்” எனப் பேச்சு

Palamedu is the villain of thunivu who saw the Jallikattu match

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத்துணிவு திரைப்படத்தின் வில்லன் ஜான் கொக்கேன் குடும்பத்துடன் வந்துகண்டு ரசித்தார்.

Advertisment

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எப்படிச் சொல்வதென தெரியவில்லை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஜல்லிக்கட்டுநம் பாரம்பரியம். நம் கலாச்சாரம். அதைக் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். மதுரையில் பொங்கல் கொண்டாட்டம் என்பதே வேற மாறியான அனுபவம். மதுரை மக்கள். மதுரை ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. மதுரையில் வந்து திரைப்படம் பார்க்கும் உணர்வு நகரத்தில் கிடைக்காது. எனது அண்ணன்தான் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

Advertisment

ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு கடந்த 10 வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். இந்த வருடம் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் மதுரை மண்ணில் வந்து பார்ப்பதற்கு. மிக சந்தோசமாக மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி. ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கெல்லாம் மிக தைரியம் வேண்டும்.

அனைத்திற்கும் மேல் என் குரு அஜித் குமார். அவரால்தான் நான் இங்கு இருக்கின்றேன். துணிவு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நான் மிகப் பெரிய அஜித் ரசிகன். நான் எப்பொழுதும் சொல்வதுதான்., அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் வாழ்க...” எனக் கூறினார்.

palamedu Thunivu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe