Skip to main content

பாலமேடு ஜல்லிக்கட்டில் ‘துணிவு’ வில்லன் -“கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும்” எனப் பேச்சு

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

Palamedu is the villain of thunivu who saw the Jallikattu match

 

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் துணிவு திரைப்படத்தின் வில்லன் ஜான் கொக்கேன் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எப்படிச் சொல்வதென தெரியவில்லை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஜல்லிக்கட்டு நம் பாரம்பரியம். நம் கலாச்சாரம். அதைக் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். மதுரையில் பொங்கல் கொண்டாட்டம் என்பதே வேற மாறியான அனுபவம். மதுரை மக்கள். மதுரை ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. மதுரையில் வந்து திரைப்படம் பார்க்கும் உணர்வு நகரத்தில் கிடைக்காது. எனது அண்ணன்தான் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

 

ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு கடந்த 10 வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். இந்த வருடம் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் மதுரை மண்ணில் வந்து பார்ப்பதற்கு. மிக சந்தோசமாக மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி. ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கெல்லாம் மிக தைரியம் வேண்டும். 

 

அனைத்திற்கும் மேல் என் குரு அஜித் குமார். அவரால்தான் நான் இங்கு இருக்கின்றேன். துணிவு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நான் மிகப் பெரிய அஜித் ரசிகன். நான் எப்பொழுதும் சொல்வதுதான்., அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் வாழ்க...” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

துணிவு பட நடிகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
thunivu movie actor Rituraj Singh passed away

சின்னத்திரையில் பல்வேறு இந்து தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரிதுராஜ் சிங். தொடர்கள் மட்டுமல்லாது சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில் வயிற்றில் சில பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (20.02.2024) நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 59. ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. 

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Palamedu Jallikattu completion

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை.

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (15-01-24) 7 மணிக்கு தொடங்கி மாலை நிறைவு பெற்றது.  இன்று (16-01-24) மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 10 சுற்றுகள் முடிந்த நிலையில் தற்போது போட்டி நிறைவு பெற்றது. இன்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 42 பேர் காயமடைந்தனர். இதில் ஒன்பது பேர் சிகிச்சை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8  காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு தமிழக அரசு சார்பில் கார் பரிசு வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் சிறந்த காளை ஒன்றுக்கும் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.