முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகினார். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த நிலையில், அக்கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக நடத்தப்படும் விதம் அதன் மீது சலிப்பை ஏற்படுத்தி விட்டது.திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து விடைபெற்றேன் என்று பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் கூறினார்