தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும் சாதிச் சான்று வழங்கும் அரசு, பிராமண சமுதாயத்தினருக்கு மட்டும் வழங்குவதில்லை எனக் கூறி சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் அருணகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், " தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியபோது, பிராமணர் சமுதாயத்தை ஒரு சாதியாக அரசு அறிவிக்காததால், ஜாதிச்சான்று வழங்க முடியாது என வருவாய் துறை செயலாளர் பதிலளித்துள்ளதாக" தெரிவித்துள்ளார்.

இது பிராமணர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், அதனால் ஜாதிகள் பட்டியலில் பிராமணர் சமுதாயத்தையும் சேர்த்து ஜாதிச்சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிராமணர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.