Advertisment

பெயிண்ட் அடிக்கும்போது கயிறு அறுந்து தொழிலாளி பலி

Painter passes away in kovai

Advertisment

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதி அருகே பெயிண்ட் அடிக்கும் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக பலியாகினார்.

வடவள்ளி பகுதி அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அதற்காக தொழிலாளி சந்திரன் என்பவர் தொங்கு சாரத்தின் மூலம் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாரத்தின் கயிறு அறுந்ததில் சந்திரன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு குவிந்தனர். ஆனால், அச்சம் காரணமாக அவரை யாரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இதனால், அவருக்கு மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

police kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe