Painter passes away ... Cannabis dealers arrested

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் ரவி பிரசாத் தனது நண்பர்களுடன் சூலூர் அடுத்த காடாம்பாடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய 3 பேரை போலீஸார் தேடி வந்த நிலையில், சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் பகுதியில் மர்மநபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக சூலூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் ஆய்வாளர் மற்றும் போலீஸார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சூரியா, மற்றும் முனியாண்டி என்பதும், மூவரும் பெயிண்டர் ரவி பிரசாத் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 2 கிலோ 450 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் பதுங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் கோபிநாத் மற்றும் வீரமணி ஆகிய இருவரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்களிடம் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களையும் கைது செய்தனர். இதனையடுத்து கொலைக் குற்றவாளிகள் 3 பேர் உட்பட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

Advertisment