Pagalavan takes charge as the new SP of Kallakurichi district!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நேற்று மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisment

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் கள்ளக்குறிச்சியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக இருந்த பகலவன்கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக தற்பொழுது பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisment