Advertisment

முதல்வரின் உத்தரவு; ஒரு மணி நேரத்தில் ஓடோடி வந்த அதிகாரிகள்

Padma Sri Chinnapillai's manai patta was searched for in an hour

Advertisment

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஒரு சென்ட் மனைக்கான கூடுதல் பட்டா அவரைத் தேடிச்சென்று அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

Announcement
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe