தமிழகத்தில் 523 கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சரின் உத்தரவின் பேரில் விவசாயிகள் நலன் கருதி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் காரீப் பருவத்திற்காக 189 நெல்கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டன. விவசாயிகளுக்கு ரூபாய் 70 ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூபாய் 1,958, ரூபாய் 50 ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு குவிண்டால் பொதுரக நெல்லுக்கு ரூபாய் 1,918-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சையில் 227, திருவாரூரில் 189, நாகையில் 126, கடலூரில் 43 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.