Advertisment

சாதனை அளவில் நெல் கொள்முதல்... அமைச்சர் காமராஜ் பேட்டி!

 Paddy procurement at record level ... Minister Kamaraj interview!

தஞ்சை அருகே குருவாடிப்பட்டியில் உள்ளநெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வெளியான நிலையில் இந்த ஆய்வினை அவர் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisment

நேரடி கொள்முதல் தற்போது சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஊரில் இரண்டுகொள்முதல் நிலையங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 826 நேரடி கொள்முதல் நிலையங்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆயிரம் மூட்டைக்கும்மேல்நெல் வரும் பகுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Advertisment

paddy Kamaraj minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe