ADVERTISEMENT

150 ரூபாய்க்கு தொகுப்பு காய்கறிகள் விற்பனை! பொது மக்கள் மகிழ்ச்சி!

09:46 PM Mar 30, 2020 | rajavel

ADVERTISEMENT

தேனி புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்படுத்தப்படும் உழவர் சந்தையில் 150 ரூபாய்க்கு காய்கறி தொகுப்பு விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

கரோனா பாதிப்பை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் 144 மற்றும் கட்டாய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொற்று நோயானது மனிதர்கள் மூலம் பரவுவதால் மனிதர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதன்படி மனிதர்கள் தங்களுக்குள் மூன்று அடி இடைவெளியில் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.



இந்த ஊரடங்கு அமலில் இருப்பதால் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பால் விற்பனை கடைகள் திறந்திருக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் திரண்டு வரும் நிலை உள்ளது. இதனால் சமூக இடைவெளியானது குறையும் நிலை உள்ளது. எனவே சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் நெருக்கடியான காய்கறிகளை பஸ் நிலையங்கள் விளையாட்டு மைதானங்கள் மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில், தேனி உழவர் சந்தை பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு காய்கறி விற்பனை நடந்து வருகிறது. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் அதிக இடைவெளி இருப்பதோடு, காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களும் இடைவெளி விட்டு நிற்க போதிய இட வசதி இருப்பதால் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெறப்பட்டுள்ளது.


அதோடு தேனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை என்பது விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பலதேவ் ஒரு அதிரடி முடிவு செய்தார். உழவர் சந்தை நிர்வாகமே காய்கறி தொகுப்பினை பையில் வைத்து விற்பனை செய்ய வலியுறுத்தினார். அதன்படி காய்கறி தொகுப்பு ரூபாய் 150க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு காய்கறிகள் விற்க்கப்பட்டு வருகிறது. இந்த காய்கறி தொகுப்பில் கத்தரிக்காய் அரை கிலோ, தக்காளி ஒரு கிலோ, வெண்டைக்காய் கால் கிலோ, அவரைக்காய் அரை கிலோ, முருங்கைக்காய் நான்கு, பச்சை மிளகாய் கால் கிலோ, பீன்ஸ் கால் கிலோ, கேரட் கால் கிலோ, சவ்சவ் ஒன்று, உருளைக்கிழங்கு அரை கிலோ, சின்ன வெங்காயம் கால் கிலோ, பல்லாரி வெங்காயம் அரை கிலோ. கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஒரு கொத்து, கீரை ஒரு கட்டு, முள்ளங்கி கால் கிலோ, வாழக்காய் 3, எலுமிச்சை 4, ஆகியவை உள்ளிட்டவற்றை தொகுப்பு காய்கறிகள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைக்கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றதுடன் மட்டும்மல்லாமல் ஆவலுடன் இந்த தொகுப்பு காய்கறிகளை வாங்கி சென்று வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT