Skip to main content

மழையில் நனைந்து பாழாகும் நெல்... விவசாயிகள் வேதனை!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

paady thiruvarur farmers

 

அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், இருபது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் கொண்டுவந்த நெல்லை கொள்முதல் செய்யாததால், நெல் முழுவதும் முளைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
 

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்து அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை, கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், 20 நாட்களுக்கு மேலாகக் கொட்டி வைத்துக் காத்திருக்கும் அவலமே நீடித்துவருகிறது. தொடர்ந்து பெய்த மழையில் நனைந்த நெல்மணிகளை வெயிலில் உலர்த்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கொள்முதல் நிலையங்களிலோ 400 முதல் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுன்றது" என்கிறார்கள்.
 

மேலும், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொட்டி காயவைக்க போதுமான இடம் இல்லாமல், சாலையில் கொட்டி வைத்து பாதுகாத்துவருவதோடு, சாலையில் காயவைப்பதால் வாகனங்களில் அடிபட்டுச் சேதமடைகிறது. பின்னர் அந்த நெல்லை குவித்துத் தார்ப்பாயைக் கொண்டு மூடி பாதுகாத்தாலும், தற்போது பெய்துவரும் குளிர்பனியால் நெல் மணிகள் முற்றிலும் முளைத்துவிட்டது என்று கவலையோடு தெரிவிக்கின்றனர். 

 

இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டுவந்து 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது. கொட்டி மூடிய நெல் முழுவதும் முளைக்க துவங்கிவிட்டது. அதோடு நெல் முழுவதும் சாம்பல் நிறமாக மாறிவிட்டது. கொள்முதல் நிலையங்களில் டோக்கன் கொடுத்து இரண்டு  நாட்களில் நெல்லை  கொள்முதல் செய்வதாக அமைச்சர் காமராஜ் கூறி வருகிறார். ஆனால் எந்த நிலையத்திலும் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை முறையாக ஒருவாரத்திற்குள் கொள்முதல் செய்துவிடுகின்றனரா என்றால் இல்லை. விவசாயிகளின் அவலம் முதலமைச்சர் பார்வைக்குப் போகுதா இல்லையா எனத் தெரியவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழைகத்தைக் கட்டாயம் ஒழுங்குப்படுத்த வேண்டும். இல்லையெனில், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி தலைமைச் செயலகம்  முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் உழைக்கும் விவசாயிகள் இயக்கம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Farmers Movement supporting India Alliance

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம்தமிழர் என்று நான்கு  கட்சிகளும் நான்குமுனை போட்டியாக தங்களது கூட்டணி கட்சிகளோடு தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர். பல்வேறு சிறு இயக்கங்களும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உழைக்கும் விவசாயிகள் இயக்கம் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.

உழைக்கும் விவசாயிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் உள்ள, சிறு, குறு, குத்தகை விவசாயிகள்  மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து  உரிமை மற்றும் மேம்பாட்டுக்காக, உழைக்கும் விவசாயிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக, ‘மார்க்சிய வழிகாட்டுதலை உள்ளடக்கிய   அம்பேத்கரிய சித்தாந்த’ அடிப்படையில் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது”.

இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள,  18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இயக்கத்தின் நிலைப்பாட்டை வரையறுக்கும் பொருட்டு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் கடந்த 25 – ஆம் தேதி இயக்க மாநிலத் தலைவர் சுந்தர் தலைமையில் இயக்க உயர் மட்டக்குழு கூடி, நாடு சந்திக்கும் வரலாறு காணாத இன்றைய பெரும் சவால்கள் அதன் விளைவாக குறிப்பாக உழைக்கும் விவசாயிகளின் ஒட்டுமொத்த  வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  விவாதித்து கீழ்க்காணும் முடிவுகளை எடுத்தது

இந்திய ‘அரசியல் சாசனச் சட்டத்தின்’ அடிப்படை அம்சங்களான – “சனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், பன்முகத்தன்மை, சமூக நீதி, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம், பேச்சுரிமை, எழுத்துரிமை, பெண் சமத்துவம், மாறுபடும் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை, அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க அனைத்து தரப்பினருக்கும் உள்ள அரசியல் உரிமை ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் எதிராக, ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சிவில் சட்டம், கார்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியாவையும் திறந்துவிடுதல், மத அடிப்படையில் பெரும்பான்மைவாதம் பேசி நாட்டைப் பிளவு படுத்தி, வெறுப்பு அரசியலை வளர்த்து, மாநில அரசுகளின் உரிமை மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தை மறுத்து, நாட்டின் முதுகெலும்புகளான உழைக்கும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை மொத்தமாக புறந்தள்ளி,’ இந்த பழம் பெரும் நாட்டின் அனைத்து சிறப்புகளையும் சிதைக்கும்” பாசிச ஆர் எஸ் எஸ்-இன் அரசியல் சக்தியான  பிஜேபி  மற்றும்  அதன் கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும், வேட்பாளருக்கும், நமது வாக்கு மற்றும் ஆதரவு இல்லை. 

மேற்காணும் அனைத்து  நாசகரப்போக்கையும் எதிர்த்து, இந்திய அரசியல் சாசனச்சட்ட விழுமியங்களை மதித்து, இந்தியாவின் சனநாயகக்  கொள்கை கோட்பாடுகள், மற்றும் உழைக்கும் விவசாயிகளை உள்ளடக்கிய உழைக்கும்  வர்க்கத்தின் நலன்   காக்கப்பட ஒன்று திரண்டுள்ள இந்தியா  கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. 

Next Story

நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தைத் தொடங்கி வைத்த ஆட்சியர்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
The collector who started the mobile paddy procurement vehicle

 

The collector who started the mobile paddy procurement vehicle

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கடலூர் மண்டலத்தில் கடந்த 2022- 2023 ஆம் ஆண்டின் பருவத்தில் 258 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 62.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 31 ஆயிரத்து 950 விவசாயிகள் பயன் அடைந்தார்கள். மேலும் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு 600.280 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 2023-2024 ஆம் பருவத்திற்கு தொடக்கமாக கடலூர் மாவட்டத்தில் வட்டம் வாரியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோயிலில் - 34, ஸ்ரீமுஷ்ணத்தில் - 35, விருத்தாசலத்தில் - 24, சிதம்பரத்தில் - 9, திட்டக்குடியில் - 15, புவனகிரியில் - 7, குறிஞ்சிப்பாடியில் - 6, வேப்பூரில்- 12, கடலூரில் - 7, பண்ருட்டியில் - 4 ஆக மொத்தம் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை பகுதிக்கு சென்று  22ம் தேதி முதல் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் திறந்துவைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்னா ரகம் (ஏ கிரேட்) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 310, பொதுரகம் (காமன்) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 265 -ம் தரப்படுகிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (22.01.2024) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக கே.எம்.எஸ் 2023-24 ஆம் பருவத்திற்கான நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(விவசாயம்) இரவிச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.