Advertisment

பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் 14வது நினைவு தினம்

Advertisment

முன்னாள் திமுக அமைச்சரும் சட்டமன்ற சபாநாயகருமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் மதுரையில் அனுசரிக்கப்பட்டது. சொக்கிகுளம் பகுதியில் உள்ள பாளையம் இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி தலைமையில் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து மாநகர் 8 வது வார்டு திருவள்ளுவர் தெரு பகுதியில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார். முன்னதாக கரோனா பாதிப்பினால் முறையான சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்க வேண்டாம் என பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.வேண்டுகோள் விடுத்த நிலையில் குறைந்த அளவில் முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்நிகழ்வுகளில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பி.டி.ஆர். பழனிவேல்ராஜனுடைய நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தில் மதுரை ஐகோர்ட் கிளையின் மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் உணவு வழங்கினார்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe