A. P. J. Abdul Kalam -  India's former President - Chennimalai - Erode

Advertisment

தமிழகத்தின் கடைக்கோடியான ராமேஸ்வரத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக உழைப்பால் உயர்ந்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அந்த மகத்தான மனிதன் இறந்து ஐந்தாண்டாகிறது. இன்று 5 ஆம் ஆண்டு நினைவு நாள். அப்துல் கலாம் அவர்களுக்கு மறவாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் உள்ளங்களும் இருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ளது ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி. இதன் தாளாளரும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான மக்கள் ராஜன் தனது வளாகத்தில் ஏற்கனவே கலாம் அவர்களின் சிலையை அமைத்திருந்தார். அந்த திருவுருவச் சிலைக்கு இன்று மக்கள்ராஜன் தலைமையில் பலரும் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்வில் சுதந்திரப் போராட்ட தியாகி மறைந்த திருப்பூர் குமரன் அவர்களின் வாரிசான அண்ணாதுரை என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலாம் சிலைக்கு மாலை அணிவித்து கலாமின் உயர்ந்த நோக்கங்களை வாசித்து புகழ் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

மறைந்த மேதகு அப்துல் கலாமால் உயர்ந்த பல அரசியல் தலைவர்கள் அவரை மறந்தநிலையில் ஒரு குக்கிராமத்தில் இன்று அப்துல் கலாமை தெரிந்து கொள்ளுங்கள் என அவர் புகழ் பாடுவது குறிப்பிடத்தக்கது.