முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

P. Chidambaram meets Chief Minister MK Stalin!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (30/05/2022) காலை 10.00 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதித்துறை, உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம். மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றதாக தகவல்கள்கூறுகின்றன.

இந்த நிகழ்வின் போது, ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

congress Leader
இதையும் படியுங்கள்
Subscribe