ADVERTISEMENT

புறப்படும் போது 400.. கைதாகும் போது 176 ... ப.சி.க்காக சொந்தத் தொகுதியில் கைதாகிய காங்கிரஸாரின் எண்ணிக்கை 

01:42 PM Aug 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக அரசை கண்டித்து தமிழகமெங்கும் , அந்தந்த மாவட்டத் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது தமிழக காங்கிரஸ் தலைமை.

ADVERTISEMENT

இது ப.சி.யின் சொந்தத் தொகுதியும், மாவட்டமுமான சிவகங்கை மாவட்டத்தில் பலத்த எதிர்ப்பார்ப்புக்களை உருவாக்கியிருந்தது. இதற்காகவே காரைக்குடியில் ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 250க்கும் அதிகமான போலீசாரை காவலுக்குப் பணித்திருந்தது.

காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகாசமாகவே காரைக்குடியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸார் ஒன்று கூடினர். அதற்கு முன்னதாக காங்கிரஸ் அலுவலக வாசலில் தனித்தனிக் குழுக்களாக இருந்த காங்கிரஸார் தான்தோன்றித் தனமாக மோடிக்கும், அமித்ஷாவிற்கும் எதிராக கோஷம் போட , கோஷம் போட்ட காங்கிரஸாரை நோக்கி போலீசாரும் பாய, அலுவலகத்திற்குள்ளே ஓடி ஒளிந்து விளையாடினர் கோஷம் போட்டவர்கள்.


ஒரு வழியாக 400க்கும் மேற்பட்ட காங்கிரஸார் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு எதிராக கோஷம் போட்டவாறு பெரியார் சிலைக்கு முன்னேறினர். அங்கு தயாராக காத்திருந்தப் போலீசாரும் கைது என அறிவிக்க, இருக்கின்ற காங்கிரஸார் எங்கே சென்றார்களோ தெரியவில்லை.!! பாதிக்கு மேல் எஸ்கேப்..!! எனினும், மிச்சமிருக்கின்ற காங்கிரஸாரை கைது செய்து மண்டபத்திற்கு அனுப்பி, கைதின் எண்ணிக்கை 176 என அறிவித்தது காவல்துறை.

ப.சி.யின் சொந்த மாவட்டத்திலேயே மத்திய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது தான் ஹைலைட்டே.!!!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT