ADVERTISEMENT

'தமிழக ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது'- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

01:27 PM Apr 25, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 'தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதிச் செய்ய வேண்டும். தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்துச் செய்ய வேண்டும். தற்போதையக் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டால் தமிழகத்திற்கு 310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும். தமிழகத்தில் கரோனா பரவலைத் தொடர்ந்து 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திச் செய்யும் திறன் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும். தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT