Skip to main content

'தமிழக ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது'- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

oxygen related tamilnadu cm wrote the letter for pm narendra modi for today

 

தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

 

oxygen related tamilnadu cm wrote the letter for pm narendra modi for today

 

அந்த கடிதத்தில், 'தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதிச் செய்ய வேண்டும். தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்துச் செய்ய வேண்டும். தற்போதையக் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டால் தமிழகத்திற்கு 310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும். தமிழகத்தில் கரோனா பரவலைத் தொடர்ந்து 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.  தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திச் செய்யும் திறன் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும். தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் ஆக்ஸிஜன்; இஸ்ரோ தந்த தகவல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

ISRO informs that there is oxygen in the moon

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்த போது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS)  என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

 

இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இது தவிர நிலவில் ஆக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் லிப்ஸ் (LIPS) என்ற கருவி பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.