Skip to main content

தமிழகத்துக்கு ரயிலில் மேலும் 27.6 டன் ஆக்சிஜன் வந்தது!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

OXYGEN EXPRESS TRAINS CHENNAI

 

தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு பணிகள், ஆக்சிஜன் விநியோகம், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார்.

 

இந்த நிலையில், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தில் தமிழகத்துக்காக மேலும் 27.6 டன் ஆக்சிஜன் ரயிலில் கொண்டு வரப்பட்டது. ஒடிசாவில் இருந்து தலா 13.8 டன் ஆக்சிஜன் நிரப்பிய இரண்டு லாரிகள் ரயிலில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தன. 

 

அதைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு லாரியும், மதுரைக்கு ஒரு லாரியும் அனுப்பப்படுகிறது.

 

ஏற்கனவே, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜன் வந்த நிலையில், ஒடிசாவில் இருந்து 27.6 டன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் ஆக்ஸிஜன்; இஸ்ரோ தந்த தகவல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

ISRO informs that there is oxygen in the moon

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

 

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும், பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.

 

நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்த போது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS)  என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்து சரித்திர சாதனை படைத்துள்ளது.

 

இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும், இது தவிர நிலவில் ஆக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபட்டு வரும் லிப்ஸ் (LIPS) என்ற கருவி பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பாலியல் உறவில் இருந்தபோது நோயாளி உயிரிழப்பு; செவிலியர் பணிநீக்கம்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

 lost their live of the patient during intercourse; Nurse layoffs

 

நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்தபோது நோயாளி உயிரிழந்து அதனால் செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸில் நிகழ்ந்துள்ளது.

 

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸின் ரெஸ்க்ஸ்ஹாம் நகரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் பெனலாப் வில்லியம்ஸ். 42 வயதான பெனலாப் வில்லியம்ஸ் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். மருத்துவமனையின் பின்புறத்தில் மருத்துவப் பணியாளர்கள் கார் நிறுத்தும் பகுதியில் அந்த நோயாளியுடன் அடிக்கடி காரில் பாலியல் உறவில் செவிலியர் ஈடுபட்டுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று இரவு அந்த நோயாளியுடன் காரில் செவிலியர் பாலியல் உறவில் இருந்த நேரத்தில் திடீரென நோயாளியின் இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு காரிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபொழுது காரில் ஆடையின்றி அரைநிர்வாணக் கோலத்தில் நோயாளி இறந்து கிடந்தார். நோயாளியுடனான இந்த தொடர்பு குறித்து செவிலியர் பெனலாப்பை அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் ஏற்கனவே எச்சரித்து வந்த நிலையில், அதையெல்லாம் அவர் அலட்சியப்படுத்தியுள்ளார். செவிலியர் பணிக்கு எதிராகவும், அதன் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.