Skip to main content

‘‘அப்படிதான் இருக்கும், சாப்பிட்டால் சாப்பிடு இல்ல வெளியே போ’-தின்பண்டம் வாங்கியவரை மிரட்டிய உரிமையாளர்!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

the owner who intimidated the consumer

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் கேரளாவைச் சேர்ந்த ரபிக் என்பவர் 3 பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.  அவற்றில் ஒன்று ஆவினங்குடி பேருந்து நிலையத்திலும் இரண்டு திட்டக்குடியிலும் இயங்கி வருகிறது. திட்டக்குடியில் கிருஷ்ணா தியேட்டர் அருகே இயங்கி வரும் பேக்கரியில் திட்டக்குடியை சேர்ந்த கொளஞ்சி என்பவர் தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மனித பல் துண்டுகள் கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கொளஞ்சி என்பவர் கடை உரிமையாளரிடம் பல் துண்டுகளைக் காண்பித்துள்ளார்.

 

அப்போது ‘அப்படிதான் இருக்கும் சாப்பிட்டால் சாப்பிடு இல்ல வெளியே சென்று விடு’ என்று உரிமையாளர் தரக்குறைவாகப் பேசியுள்ளார். எங்கு வேண்டுமானாலும் போய் சொல் என்னிடம் அட்வகேட் உள்ளனர் என மிரட்டியும் உள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் கூட்டமாக கூடினர். அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுற்றியிருந்த பொதுமக்கள் கூறுகையில், “சுத்தமில்லாமல் செய்யும் தின்பண்டங்களைச் சாப்பிட்டால் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

அதனால் உடனே தமிழக உணவு பாதுகாப்புத் துறை, கடலூர் மாவட்ட அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தகுந்த அதிகாரிகள் கடையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடை உரிமையாளர் ரபிக் மீது நடவடிக்கை எடுக்கும்படி” கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேக்கரியில் முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி 

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

3 admitted to hospital after eating egg pops, cake at bakery
கோப்புபடம்

 

ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தாமரைச்செல்வி(30). இவர்களது குழந்தை தக்‌ஷினி(4). உறவினர் சிவகாமி(30). நேற்று மதியம் தாமரைச்செல்வி தனது மகள் மற்றும் உறவினர் சிவகாமி உடன் ஈரோடு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். 

 

வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே தாமரைச்செல்வி, சிவகாமி, தக்‌ஷினி ஆகிய 3 பேருக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்நிலையில், ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில், அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இன்று காலை சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டதோடு மறு அனுமதி வரும் வரை வேறு எந்த உணவுப் பொருட்களையும் தயாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பேக்கரியில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

 

 

Next Story

அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்; போலீசார் தீவிர விசாரணை! 

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Theft at Vellore Bakery

 

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் கே.மோட்டூர் பகுதியில் பெருமாள் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் லோகநாதன் மற்றும் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் தனித்தனியாக மளிகை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் நேற்று வழக்கம் போல இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது, பெருமாள் என்பவரின் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த பணம் மற்றும் பேக்கரி தின்பண்டங்கள் திருடு போனது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் உள்ள லோகநாதன் மற்றும் ஜனார்த்தனன் ஆகிய இருவர்களின் மளிகை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர்

 

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் மளிகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்து அதில் உள்ள இரண்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த  கடைகளில் திருட முயற்சி செய்ததும் பேக்கரி கடையில் தின்பண்டங்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.