Skip to main content

பேனர்  உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பேனர் கட்டும் தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி பாலசந்தர் தலைமையில்  நடந்தது.

Published on 20/09/2019 | Edited on 13/12/2019

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அதிமுகவினர் சாலையின் நடுவே வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் காற்றடித்து  திடிரென்று சாய்ந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ  என்ற பெண் மீது டிஜிட்டல் பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த தண்ணீர் லாரி அதிவேகமாக மோதிய விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

owner meeting




இந்த சம்பவம் வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே சென்னை உயர்நீதிமன்றம் தானக முன்வந்து  டிஜிட்டல் பேனர் விளம்பரங்களை வைப்பதால் தான் சாலையில் போக்குவரத்து இடையூறாகவும், பொதுமக்களும் அமைந்ததால் தான் சாலை விபத்தில் பரிதாபமாக சுபஸ்ரீ உயிரிழந்தார்.

அதனால் உடனே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற தமிழக காவல்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கப்பட்டது.


நீதிமன்ற உத்தரவின் படி விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும்  வைக்கப்பட்ட  டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற அந்த அந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றினார்கள்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் ஆகிய மாவட்ட அதிகாரிகளின் உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், எலவனாசூர்கோட்டை, எடைக்கல் ஆகிய காவல் நிலையம் எல்லை பகுதியில் உள்ள டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், டிஜிட்டல் பேனர்களை கட்டும் கூலித்தொழிலாளிகள் என அனைவருக்கும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் டிஎஸ்பி பாலசந்தர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது டிஜிட்டல் பேனர்கள் அடித்தால் கடைக்கு சீல் வைத்து பூட்டுகள் போட்டு பூட்டி உரிமையாளர்கள் மீதும், பேனர் வைப்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என கூறினார்.

அப்போது இன்ஸ்பெக்டர்கள் விஜி, பத்மா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, மாணிக்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .

Next Story

‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We will make the India coalition win to protect India CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (23.02.2024) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம். நேற்று நான் சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன்.  கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.

தாய் தமிழ்நாட்டையும் திமுகவையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால் அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

We will make the India coalition win to protect India CM MK Stalin

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள், நிதிநிலை அறிவிப்புகள், மத்திய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும். இந்தியாவைக் காக்க‘இந்தியா’வை வெற்றி பெறச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.