/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1998_0.jpg)
நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவருடைய நினைவிடம் உள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் நோக்கி அதிகாலை முதலே ரசிகர்கள் மக்கள் பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''அவர்கள் நினைத்தபடி பேரணி நடந்திருப்பதை நீங்கள் அனைவரும் பார்த்துள்ளீர்கள்.முதலமைச்சர் குருபூஜையின் மீதும் விஜயகாந்த் மீது கொண்டிருக்கின்ற பற்றின் காரணமாக அரசவையில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவரையே (தன்னை) நேரடியாக அனுப்பி அவர் குருபூஜையில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆகவே இதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்'' என தெரிவித்தார்.
திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் விஜயகாந்த்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ' மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணை விட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!#Vijayakanthpic.twitter.com/aE3OR2MOZl
— M.K.Stalin (@mkstalin) December 28, 2024
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)