Advertisment

அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் பலி!

owner of the gym who exercised for a long time  lost

சேலம் வெங்கடசாமி தெருவைச் சேர்ந்த மகாதிர் முகமது(35) என்பவர் குகை ஆற்றோர வடக்கு தெருவில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வந்துள்ளார். அந்த வகையில் மகாதிர் முகமது தினமும் அங்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் இரவு 6 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

இரவு 8 மணிக்கு பிறகு ஜிம்மில் உடற்பயிற்சி செய்தவர்கள் அனைவரும் சென்ற பிறகும் மகாதிர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஜிம்மில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் மகாதிர் முகமத்விற்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த நிலையில் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் நீண்ட நேரமாக மகாதிர் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது ஓட்டுநர் ஜிம்மின் குளியலறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு காது மற்றும் மூக்கில் ரத்த கசிவு ஏற்பட்டு மூச்சு பேச்சியின்று மகாதிர் கீழே விழுந்து கிடந்தார்.

Advertisment

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகாதிர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாதிர் முகம்மதுவிற்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அதனால் அவர் அதிகளவில் உடற்பயிற்சி செய்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Salem police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe