
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தோல் ரசாயன நிறுவனத்தின் பங்குதாரர்கள் வி.சி.மோட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாலீம் ஷூஸ் என்ற தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தோல் ரசாயனம் விற்பனை செய்து வந்துள்ளனர். அதன் பேரில் தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ரசாயன நிறுவனத்திற்கு ரூபாய் 78 லட்சம் பணம் தர வேண்டி இருந்துள்ளது. ஆனால் காலணி தொழிற்சாலை நிர்வாகம் நிலுவை பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தியும், அதேபோல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரசாயன நிறுவன பங்குதாரர்கள் சென்னையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சென்று இதன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கின் தீர்ப்பை ஏற்று ரூபாய் 30 லட்சத்திற்கு வங்கியின் வரைவோலை வழங்கியும் அதேபோன்று மீதமுள்ள ரூபாய் 48 லட்சத்துக்கு 6 லட்சம் வீதம் 8 காசோலைகளை காலனி தொழிற்சாலை நிர்வாகம் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து அந்த காசோலைகளை பணமாக்க வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை எனத் திரும்பி வந்துள்ளதாக தெரிகிறது.
அதனைத்தொடர்ந்து ரசாயன நிறுவனத்தின் பங்குதாரர்கள் இந்த பிரச்சனை குறித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு தொடர்ந்தனர். அப்போது வாழ்க்கை விசாரித்த நீதிபதி நவீன் துரைபாபு செக் மோசடி வழக்கில் காலணி தொழிற்சாலை பங்குதாரர்களின் ஒருவரான ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முகமது சாலிம் என்பவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அதேபோல் ரூபாய் 48 லட்சம் பணத்தை வழங்க வேண்டும். பணம் வழங்கத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார்.