Advertisment

திமுக மாநாட்டில் 'ஓவைசி'!

owasi

திமுக மாநாட்டிற்கு ஓவைசி வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

ஏ.ஐ.எம்.ஐ.எம்கட்சியின் நிறுவனரும், நாடாளுமன்றஉறுப்பினருமான ஓவைசியைதிமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் மாநிலச் செயலாளர் மஸ்தான் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் 'இதயங்களை இணைப்போம்'என்ற திமுகவின் மாநாட்டிற்கு வருகை தருமாறு திமுக சார்பில்அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட ஓவைசி அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் ஜனவரி 6-ஆம் தேதி 'இதயங்களை இணைப்போம்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.இதன்மூலம், தமிழக அரசியலிலும் ஓவைசியின்பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐந்து இடங்களில் ஓவைசியின் கட்சி வெற்றிபெற்றது. இந்நிலையில், கடந்த வாரம் அவர் பேட்டி அளித்தபொழுது, திமுகவுடன் கூட்டணியில்சேர விருப்பம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று அவருடன் திமுகசிறுபான்மை நல உரிமைப் பிரிவின் மாநிலச் செயலாளர் மஸ்தான் மேற்கொண்ட சந்திப்பில் அவர் திமுக மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

owaisi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe