தஞ்சாவூர் மாவட்டம் சோழவரம் அருகே லாரி தலைகுப்புற விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சக்தி சர்க்கரை ஆலையில் இருந்து லாரியானது கும்பகோணத்தில் உள்ள தொழிற்சாலைக்கு மொலாசிஸ் எனும் கரும்பு சாறிலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் சோழவரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் இடிபாடுகளில் கொண்ட லாரி ஓட்டுநரை மீட்டனர். லாரி தலைகீழாக கவிழ்ந்ததால்மொலாசிஸ் கழிவு சாலை முழுவதும் வழிந்து ஓடியது. இதில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் மொலாசிஸ் பாழானதாகதெரிகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.