Advertisment

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிரடி... அரசு ஊழியர்கள் இடமாற்றம்..!

ghj

Advertisment

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தேர்தல் நடைபெறும் குறிப்பிட்ட அந்த 9 மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக பணியில் இருப்பவர்களை வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் விரைவில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. தொகுதி வரையறை பிரச்சனை காரணமாகக் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போது இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

election commission
இதையும் படியுங்கள்
Subscribe